ஈரான் வீழ்ந்தா வர்ற அகதிகள் கூட்டம், பாகிஸ்தான் எக்கனாமியையே காலி பண்ணிடும்! ஏற்கனவே பிச்சை எடுக்கிற நாட்டுக்கு, இது சாவு மணி.. ஈரான் – பாகிஸ்தான் 1,000 கிலோமீட்டர் பார்டர் இப்போ ஒரு ‘டைம் பாம்’! பலூச் கிளர்ச்சியாளர்களும் ஷியா போராளிகளும் கைகோர்த்தா, பாகிஸ்தான் மேப்ல பாதி காணாம போயிடும்! இது பிரிவினை இல்ல… ஒரு தேசத்தோட சரித்திரம் முடியப்போற அறிகுறி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமடைந்து வரும் போர், தற்போது தெற்கு காக்காசஸ் மற்றும் தெற்காசிய பகுதிகள் வரை பரவி உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான…

iran pakistan

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமடைந்து வரும் போர், தற்போது தெற்கு காக்காசஸ் மற்றும் தெற்காசிய பகுதிகள் வரை பரவி உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப்பகுதி தற்போது ஒரு பரபரப்பான பகுதி போல மாறியுள்ளது. ஈரானுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகப்படியான ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதால், ஈரானின் மீதான ஒவ்வொரு தாக்குதலும் பாகிஸ்தானின் உள்நாட்டு ஸ்திரத்தன்மையை நேரடியாக பாதிக்கிறது. பாகிஸ்தானின் மக்கள் தொகையில் சுமார் 15 முதல் 20 சதவீதத்தினர் ஷியாக்களாக இருக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணம் மற்றும் ஈரானிய புனிதத்தலங்கள் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தான் வீதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் அரசாங்கம் ஒருபுறம் சவுதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு தனது ஏர் டிபன்ஸ் அமைப்புகளை அங்கு அனுப்பியுள்ளதுடன், மறுபுறம் அமெரிக்காவிடம் நிதி உதவி பெற்றுக்கொண்டு தனது வான்பரப்பை ஈரானுக்கு எதிரான ட்ரோன் தாக்குதல்களுக்கு ரகசியமாக அனுமதித்துள்ளது. இந்த இரட்டை வேடம் பாகிஸ்தானுக்குள் மிகப்பெரிய உள்நாட்டுப் போருக்கான விதையை தூவியுள்ளது. கில்கிட்-பால்டிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஷியா தலைவர்கள், பாகிஸ்தான் அரசு ஈரானுக்கு எதிராக செயல்பட்டால் தாங்கள் தனி நாடாக பிரிந்து செல்வோம் என பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். ஈரான் ஒருவேளை சிதைக்கப்படும் பட்சத்தில், அங்கிருந்து வெளியேறும் கோடிக்கணக்கான அகதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைவது அந்த நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கிவிடும்.

ஈரானிய எல்லைப்பகுதிகளான சிஸ்தான்-பலுச்சிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணங்களில் செயல்படும் கிளர்ச்சி குழுக்கள் தற்போது முன்னெப்போதையும் விட அதிக வலிமை பெற்றுள்ளன. பலூச் விடுதலை படைகள் மற்றும் பிற ஆயுதமேந்திய குழுக்கள், ஈரானில் நிலவும் குழப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தானிடமிருந்து தனி நாடு கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஜேம்ஸ்டவுன் போன்ற சர்வதேச ஆய்வு நிறுவனங்களின்படி, இந்த முறை பலூச் கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களுடனும், மக்களிடையே அதிக வரவேற்புடனும் செயல்பட்டு வருகின்றனர். ஒருவேளை ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள ஷியா போராளிகளும் பலூச் பிரிவினைவாதிகளும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தால், பாகிஸ்தான் தனது நிலப்பரப்பில் பாதியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஈரான் தனது கவனத்தை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்த் திருப்பி, அங்கிருக்கும் ஆதரவு அமைப்புகள் மூலம் மறைமுகப் போரை தீவிரப்படுத்த முயல்கிறது. இது பாகிஸ்தானுக்குள் ஐஎஸ்-கே போன்ற சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கும் ஷியா குழுக்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய மதக் கலவரத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், சீனாவின் மிகப்பெரிய முதலீடான 60 பில்லியன் டாலர் மதிப்பிலான சிபெக் திட்டம் இந்த மோதலால் கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் தன்னை ஒரு பாதுகாப்பான நாடாக காட்டிக்கொள்ள தவறியதுடன், அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவது சீனாவிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தனது வெளியுறவு கொள்கையை இந்தியாவின் மீதான வெறுப்பின் அடிப்படையில் மட்டுமே அமைத்து, அமெரிக்க ஆதரவு கூட்டணிகளில் இணைந்தது இப்போது அதன் கழுத்திற்கே கத்தியாக மாறியுள்ளது. பாகிஸ்தான் எடுக்கும் ஒவ்வொரு தவறான முடிவும் அந்த நாட்டை சிரியா அல்லது ஈராக் போன்ற ஒரு சிதைந்த நாடாக மாற்றும் கிளைமாக்ஸை நோக்கி நகர்த்தி வருகிறது.

பாகிஸ்தானின் இந்த சரிவு இந்தியாவுக்கும் ஒரு பாதுகாப்பு சவாலாக அமையக்கூடும். பாகிஸ்தானுக்குள் நிலவும் உள்நாட்டு குழப்பங்களை திசைதிருப்ப, அந்நாட்டு ராணுவம் பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்ய முயற்சிக்கலாம். குறிப்பாக காஷ்மீர் போன்ற பகுதிகளில் ஏற்கனவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பாதுகாப்பு படைகள் எல்லைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஈரானின் வீழ்ச்சி என்பது வெறும் ஒரு நாட்டின் வீழ்ச்சி மட்டுமல்ல, அது பாகிஸ்தான் என்ற தேசத்தின் வரைபடத்தையே மாற்றி அமைக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பது தற்போதைய கள நிலவரம் உணர்த்தும் கசப்பான உண்மையாகும்.