இனிமேல் இமெயிலை படிக்க வேண்டாம், கேட்கலாம்.. வந்துவிட்டது பெர்சனல் வாய்ஸ் தொழில்நுட்பம்..!

Published:

டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதும் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக மனிதர்களின் வேலை பளு குறைந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு என்ற டெக்னாலஜி வந்த பிறகு மிக எளிய முறையில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என்பதும் 100 பேர் சேர்ந்து செய்யும் வேலையை ஒரு சில மணி நேரத்தில் இந்த தொழில்நுட்பம் செய்து முடித்துக விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பெர்சனல் வாய்ஸ் என்ற புதிய தொழில்நுட்பம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இமெயில் உள்ளிட்ட நமது மொபைல் போனில் அல்லது கம்ப்யூட்டரில் உள்ளவற்றை நாம் தற்போது படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பர்சனல் வாய்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் இனி ஈமெயிலை குரல் மூலம் நம்மால் கேட்க முடியும். அதுவும் நம்முடைய குரலிலேயே கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய குரலை நமது டிவைஸில் பதிவு செய்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறையும் நாம் இமெயிலை ஓபன் செய்யும்போது அந்த இமெயில் உள்ள விஷயங்கள் நமது குரலாக ஒலிக்கும். அதேபோல் மொபைல் போனில் உள்ள செய்திகள் உள்பட அனைத்து விஷயங்களையும் நாம் இனிமேல் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, பெர்சனல் வாய்ஸ் தொழில்நுட்பம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படிக்கும் வழக்கம் அனைவர் மத்தியிலும் குறைந்து கொண்டே வரும் நிலையில் இமெயில் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெர்சனல் வாய்ஸ் தொழில்நுட்பம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்பதும் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...