ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய சந்தைகளில் புதிய ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த போன் பிளிப்கார்ட், அமேசான், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் பிற தளங்கள் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. செப்டம்பர் 13 முதல் முன்பதிவுகள் தொடங்கவுள்ளது.
ஐபோன் 16 மாடலின் விலை $799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ .67,000) தொடக்க விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐபோன் 16 பிளஸ் $899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ .75,500) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 புரோ விலை 128 ஜிபிக்கு $999 (சுமார் ரூ .83,870), மற்றும் 256 ஜிபிக்கான ஐபோன் 16 புரோ மேக்ஸிற்கான $1199 (சுமார் ரூ .1 லட்சம்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க விலையாகும்.
இந்தியாவில் ஐபோன் 16 விலை ரூ .79,900 எனவும், ஐபோன் 16 பிளஸ் ரூ .89,900 எனவும், , ஐபோன் 16 புரோ, ரூ .1,19,900 எனவும் பிரீமியம், ஐபோன் 16 புரோ மேக்ஸ் ரூ .1,44900 எனவும் விற்பனையாகும்.
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் முன்பதிவு செப்டம்பர் 13 அன்று மாலை 5:30 மணிக்கு தொடங்கும் என்றும் முதல் விற்பனை செப்டம்பர் 20 அன்று நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.