இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோ விரைவில்.. லீக் ஆன நம்பமுடியாத சில தகவல்கள்..!

By Bala Siva

Published:

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இந்த போன் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் குறித்து கசிந்த தகவலின்படி இந்த போன் Xiaomi 13 ஐ விட மெலிதாக இருக்கும் என்றும், அதாவது 1.55 mm பெசல் அளவுடன் வரக்கூடும் என்றும், இதன் விளைவாக, இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் மிகவும் மெலிதான பெசல்களைக் கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த போன் இருக்கக்கூடும் என தெரிகிறது.

iphone151ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஒரு சூப்பர் ஃபிளாக்‌ஷிப் இருக்க வாய்ப்பு இருப்பதாக @UniverseIce ஸ்கிரீன் ப்ரொடெக்டரின் புகைப்படம் தெரிவிக்கின்றது. அதேபோல் ​​ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் எட்ஜ்லெஸ் அனுபவத்தை கொடுக்கும் என தெரிகிறது. மேலும் ஐபோன் 14 ப்ரோ 2.17 மிமீ பெசல் அளவுடன் S23 1.95 மிமீ அளவுள்ள பெசல்களைக் கொண்டிருந்தது என்பது தெரிந்ததே.

ஐபோன் ப்ரோ மாடல்கள் அதன் பிரீமியம் ஆண்ட்ராய்டு சகாக்களுடன் போட்டியிட பின்புறத்தில் 48MP லென்ஸுடன் கூடிய கேமிராவும், டிப்ஸ்டர் புரோ மேக்ஸ் மாடலில் IMX903 சென்சாரும் இருப்பதாக தெரிகிறது. மேலும் இதில் பெரிஸ்கோப் கேமராவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஐபோன் 15 ஸ்னார்போனில் சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்திற்கான USB Type-C போர்ட் இருக்கும் என்றும், கூடுதலாக, டைனமிக் ஐலேண்ட் வெண்ணிலா மற்றும் பிளஸ் மாடல்களில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...