உலகின் மிக வேகமான இன்டர்நெட்.. ஒரு நொடியில் 40,000 திரைப்படங்கள் டவுன்லோடு..!

By Bala Siva

Published:

 

ஒரே ஒரு நொடியில் 40 ஆயிரம் திரைப்படங்களை டவுன்லோட் செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், உண்மையாகவே ஜப்பானில் உலகின் மிக வேகமான இன்டர்நெட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், இந்த இன்டர்நெட் வேகத்தில் ஒரே நொடியில் 40 ஆயிரம் 4K திரைப்படங்களை டவுன்லோட் செய்ய முடியும் என்றும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை, தற்போது 5ஜி இன்டர்நெட் வசதி இருந்தாலும் பொதுவாக 10 எம்பிபிஎஸ் முதல் 150 எம்பிபிஎஸ் வரை இன்டர்நெட் வேகம் இருக்கும் என்பது தெரிந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தியாவின் சராசரி இன்டர்நெட் ஸ்பீட் 65 எம்பிபிஎஸ் தான் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், தொடர்ந்து இன்டர்நெட் அதிகரித்து வரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக 500 எம்பிபிஎஸ் ஸ்பீடு என்பது சர்வசாதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் ஒன்றரை 1 Tbps வேகத்தில் இன்டர்நெட் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவில், 1.21 Tbps எஸ் இன்டர்நெட் ஸ்பீட் உள்ளதாம். இந்த இன்டர்நெட் வேகத்தின் மூலம் ஒரு நொடியில் 180 க்கும் அதிகமான 4K திரைப்படங்களை டவுன்லோட் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

ஆனால், உலகின் மிக வேகமான இன்டர்நெட் ஸ்பீடு இது இல்லை என்றும், தற்போது ஜப்பானில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் சமீபத்தில் சாதாரண ஆப்டிகல் கேபிளை வைத்து 4.21 Tbps இன்டர்நெட் வேகத்தை சோதனை முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பதாகவும், இந்த இன்டர்நெட் வேகத்தில் ஒரே ஒரு நொடியில் 40 ஆயிரம் 4K திரைப்படங்களை டவுன்லோட் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த அளவுக்கு ஸ்பீடு எப்போது இந்தியாவுக்கு வரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

Tags: internet, japan, speed