சமூக வலைதளங்களில் போட்டிகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு சமூக வலைதளங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் தற்போது தங்களது பயனாளிகளுக்கு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் இந்த அம்சம் மூலம் தங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு இன்ஸ்டா மூலம் லொகேஷன்கள் ஷேர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பிரபலங்கள் இருக்கிறார்கள் என்பதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யும் சமூக வலைதளத்தில் நம்பர் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தற்போது லொகேஷன்கள் ஷேர் செய்யும் புதிய அம்சம் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நாம் எங்கே இருக்கிறோம் அல்லது நாம் பதிவு செய்யும் புகைப்படம், வீடியோ எந்த இடத்தை சேர்ந்தது போன்ற லொகேஷன்கள் ஷேர் செய்யலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படாத வண்ணம் இந்த லொகேஷன்கள் யார் யாருக்கு மட்டும் தெரிய வேண்டும், தங்களது நண்பர்களுக்கு மட்டுமா? அல்லது மியூச்சுவல் ஃபாலோயர்களுக்கு மட்டுமா என்பதையும் இன்ஸ்டா பயனளி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இன்ஸ்டாவில் லொகேஷன் ஷேர் செய்யும் அம்சம் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தான் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஸ்னாப்ஷாட் என்ற சமூக வலைதளத்தில் இந்த அம்சம் உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் அதன் பயனாளிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.