இந்த 2 மட்டும் தெரிந்தால் போதும்.. பிரஷ்ஷராக இருந்தாலும் ரூ.9 லட்சம் சம்பளம்.. இன்போசிஸ் அறிவிப்பு..!

By Bala Siva

Published:

பொதுவாக டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் பிரஷ்ஷர்களை வேலைக்கு எடுக்கும் போது மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வருட சம்பளத்திற்கு தான் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஏஐ டெக்னாலஜி குறித்த படிப்புகள் படித்தவர்களுக்கு பிரஷ்ஷராக இருந்தாலும் ஒன்பது லட்சம் வரை சம்பளம் தர இன்போசிஸ் நிறுவனம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏஐ டெக்னாலஜி தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்போசிஸ் நிறுவனமும் ஏஐ டெக்னாலஜி படித்த நபர்களை வேலைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

குறிப்பாக ஏஐ டெக்னாலஜி, மெஷின் லேர்னிங் ஆகியவை படித்த பிரஷ்ஷர்களை ஒன்பது லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுக்க இன்போசிஸ் திட்டம் உள்ளதாகவும் கூடுதலாக கிளவுட் கம்ப்யூட்டிங் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிசிஎஸ் நிறுவனம் ஏற்கனவே ஏஐ டெக்னாலஜி படித்தவர்களை வேலைக்கு எடுத்து வரும் நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவனமும் அதே பாதையில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஐ  டெக்னாலஜியை பொருத்தவரை மெஷின் லேர்னிங் என்பது மிகவும் முக்கியமான பிரிவு என்பதால் இந்த பிரிவு படித்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏஐ டெக்னாலஜி உடன் மெஷின் லேர்னிங் படித்தவர்கள் இன்போசிஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.