காதுக்குள்ளள சும்மா கொய்ங்-ன்னு கேக்குதா.. நாட்டாமை படத்தில் இந்த விசில் சப்தம் எப்படி வந்துச்சு தெரியுமா?

Published:

சினிமா காமெடிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் கன்னத்தில் அறையும் காட்சி வரும் போது ஒருகணம் தடுமாறும் போது கொய்ங்ங்ங்… என்று ஒரு சப்தம் வரும் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? அந்த சப்தம் எப்படி உருவானது தெரியுமா?

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில், குஷ்பு, மீனா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நாட்டாமை. அதுவரை வந்த கிராமத்து பஞ்சாயத்து படங்களின் அத்தனை வசூலையும் முறியடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். சரத்குமாருக்கு இந்தப் படம் அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காதல், சென்டிமெண்ட், காமெடி, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என பக்கா கமர்ஷியல் படமாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தினை இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கவுண்டமணி நாட்டாமை சரத்குமாரிடம் தம்பி சரத்குமார் டீச்சரை வச்சிருக்காரு என்று சொல்லும் போது அவர் பலமாக ஓங்கி கன்னத்தில் அறைவார். அப்போது கொய்ங்ங் என்ற சப்தம் 10 வினாடிகளுக்கு காதை பிளக்கும். இந்த சப்தத்தை எப்படி உருவாக்கினார்கள் தெரியுமா?

இந்தக் காட்சி எடுத்து முடித்தபின் ஏவிஎம் ஸ்டுடியோவில் சவுண்ட் ரெக்கார்டிங்கில் கே.எஸ்.ரவிக்குமார் அமர்ந்து ஒலிக் கலவையை பார்வையிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது இந்தக் காட்சி வரவே இங்கே ஒரு எதுவுமே இல்லாமல் நீண்ட பீப் ஒலி போன்று ஒரு சத்தம் இருந்தால் நன்றாக இருக்கும் என சவுண்ட் இன்ஜினியரிடம் கூற, அவரும் பலவாறு ஒலிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..

ஆனால் கே.எஸ்.ரவிக்குமாருக்கு அந்த ஒலிகளில் திருப்தி இல்லை. அதன்பின் சில நேரம் கழித்து திடீரென மின்தடை ஏற்பட்டவுடன் ஜெனரேட்டரிலிருந்து கொய்ங்… என்று சப்தம் வந்திருக்கிறது. இதைக் கவனித்த கே.எஸ்.ரவிக்குமார் இதே சப்தத்தை ரெக்கார்டிங் செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார். சவுண்ட் இன்ஜினியரும் ஓகே சொல்ல அந்த சப்தத்தை அப்படியே ரெக்கார்டிங் செய்து படத்தில் அறையும் போது பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதனையடுத்து அடுத்து வந்த பல படங்களிலும் அந்த கொய்ங்ங்.. ஒலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நாட்டாமை படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடிக் காட்சிகளுக்கு கவுண்டமணி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்தாராம். ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் படம் முழுக்க அவர் வருவது போன்றும், அதுவும் இரட்டை வேடத்தில் காமெடிக் காட்சிகளை எடுத்திருக்கிறார். நாட்டாமை தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்று.

மேலும் உங்களுக்காக...