இந்திய பங்குச் சந்தை மேலும் ஒரு மோசமான நாளை இன்று சந்தித்தது. குறிப்பாக நிப்டி தொடர்ந்து 10வது நாளாக சரிந்து, இதுவரை இல்லாத நீண்ட இழப்பை பதிவு செய்தது. இன்று மட்டும் நிப்டி 37 புள்ளிகள் சரிந்து 22,083-ல் முடிவடைந்தது, அதேபோல் சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிந்து 72,990-ல் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நிப்டி வங்கி ஓரளவு உயர்ந்தது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் HDFC பேங்க் ஆகிய முக்கிய பங்கு வாங்குதலால் 131 புள்ளிகள் உயர்ந்து 48,245-ல் முடிந்தது.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ரயில்வே பங்குகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால் ஆட்டோ துறை தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. குறிப்பாக Bajaj Auto & Hero MotoCorp 52 வார குறைந்த நிலையை எட்டியது.
India Cements பங்குகள் 15% உயர்ந்தது என்பதும், Swiggy மற்றும் Zomato பங்குகள் உயர்வு பெற்றது. ஆனால் Adani Green, Supreme Industries, Paytm, Jubilant Foodworks மற்றும் Coromandel International ஆகியவை பெரும் சரிவை இன்று சந்தித்தன