ஹைதராபாத்தில் வசித்து வந்த கல்பனாவின் வீடு கடந்த 2 நாட்களாக பூட்டி இருந்ததாகவும், இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் சற்று முன் அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை வட்டாரங்களின் தகவலின்படி, அவர் இன்னும் ஆபத்தான நிலையில்தான் உள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகிகளில் ஒருவரான கல்பனா, “ராசாவின் மனசெல்லாம்” என்ற திரைப்படத்தில் பாடத்தொடங்கி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.