எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அதிக எடையுடைய செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
“ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட், இஸ்ரோவின் Gsat-20 செயற்கைக்கோளை 19 நவம்பர் அன்று விண்ணில் அனுப்ப இருக்கிறது. இது 4,700 கிலோ எடையுடைய செயற்கைக்கோள் ஆகும். இந்த தகவலை இஸ்ரோ தலைவர் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட், 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே ஏவும் திறன் உள்ளது. ஆனால் Gsat-20, 4 டன்னுக்கும் மேலான எடையுடன் இருப்பதால் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட்டின் உதவியுடன் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய செயற்கைக்கோள், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்றும், விமானங்களில் இணைய வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.