மோடி இருக்கும் வரை ஹசீனாவை இந்தியா ஒப்படைக்காது.. வங்கதேசம் முடிஞ்சதை செஞ்சுகிடட்டும்.. அமெரிக்காவின் பொம்மையான யூனுஸ் ஆட்சியை இந்தியா அகற்றுமா? மீண்டும் ஹசீனா அரசு அமைய இந்தியா உதவுமா? அண்டை நாட்டு பிரச்சனையில் இந்தியா எவ்வளவு தூரம் தலையிடும்?

வங்கதேசம் இந்தியாவின் அண்டை நாடு மட்டுமல்ல, முக்கிய கூட்டாளியான சில ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில், தற்போது நிலவும் தீவிர அரசியல் மற்றும் நீதித்துறை நெருக்கடி இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

modi hasina

வங்கதேசம் இந்தியாவின் அண்டை நாடு மட்டுமல்ல, முக்கிய கூட்டாளியான சில ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில், தற்போது நிலவும் தீவிர அரசியல் மற்றும் நீதித்துறை நெருக்கடி இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை கொல்ல உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருப்பது போன்ற வலுவான நீதித்துறை அமைப்பு உலகில் மிக குறைவு. வங்கதேசத்தில் உள்ள நீதிமன்றங்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கும் என்ற ஒரு கருத்தும் பரவலாக இருந்து வருகிறது.

ஷேக் ஹசீனாவின் எதிர்ப்பாளர் மற்றும் வங்கதேசத்தின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்ட முகமது யூனுஸ் வங்கதேசத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை போல சிறிய வங்கியை ஆரம்பித்து ஏழைகளை மேம்படுத்தியதாக பாராட்டப்பட்டவர்.

ஆனால், ஷேக் ஹசீனா பதவிக்கு வந்த பிறகு, கிராமிண் வங்கியில் ரூ. 1,000 கடன் கொடுத்துவிட்டு ரூ. 40,000 என கணக்கில் எழுதியதால் பல ஏழைகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் யூனுஸுக்கு “மிஸ்டர் பிளட் டெரர்” என்ற பெயரும் இருப்பதாகவும் கூறினார்.

யூனுஸ் மீதான வழக்குகளை நடத்த கூடாது என்று 2024-இல் ஒபாமா உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்த போதிலும், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைத்து, தற்போதும் அவர் ஜாமீனில் தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் 25 கோடி மக்கள் இருக்கிறார்கள். அங்கே நடந்த போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியான வன்முறையில் பல இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தடை செய்யப்பட்ட ஜமாத் குழுக்கள் மீண்டும் அரசியலில் நுழைய முயல்வது, மாணவர் அமைப்புகளிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. முன்னதாக வங்காளிகளாக சேர குரல் கொடுத்த மக்கள் இப்போது மதத்தின் பெயரால் பிளவுபட்டுள்ளனர். வங்கதேசத்தின் இந்த அரசியல் ஸ்திரமின்மை இந்தியாவுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது:

வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரே இணைப்பு பாதையான சிலிகுரி காரிடார் 22 கி.மீ. தாழ்வாரத்திற்கு அருகில் வங்கதேசம் இருப்பதால், அங்கு நடக்கும் வன்முறைகள் இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கிறது. இதை சமாளிக்க இந்தியா அந்த பகுதியில் மூன்று புதிய ராணுவ தளங்களை அமைத்துள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்துள்ளது. அவரது தந்தையின் குடும்பம் கொல்லப்பட்டதை போல ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காக இந்தியா ஆதரவளிக்கிறது. நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தாலும், இந்தியா கண்டிப்பாக ஹசினாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்காது என்று கூறப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே இருந்தாலும், அரசியல் குற்றங்களுக்கு இது பொருந்தாது என இந்தியா வாதிடலாம்.. மொத்தத்தில் மோடி இருக்கும் வரை ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்காது என்றும், வேண்டுமானால் மீண்டும் ஹசினாவை பிரதமராக்க இந்தியா முயற்சிக்கலாம் என்றும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி வங்கதேசத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியவில்லை. எனவே, இந்தியா தலையிட்டு யூனுஸின் ஆலோசனையை செல்லாது என்று அறிவித்து, நியாயமான தேர்தலை நடத்த அமெரிக்காவே வலியுறுத்தலாம் என்று கூறப்பட்டு வருகிறது. அப்படி ஒரு நிலைமை வந்தால் அது ஹசீனாவுக்கு ஆதரவாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.