இறக்குமதியில் இருந்து ஏற்றுமதி.. சீனாவுக்கு ஆப்பிள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா..!

  பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் கடந்த பல ஆண்டுகளாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இந்தியா எலக்ட்ரானிக் துறையில் முன்னேறி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு வந்துள்ளதாக தகவல்…

Apple PC

 

பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் கடந்த பல ஆண்டுகளாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இந்தியா எலக்ட்ரானிக் துறையில் முன்னேறி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஏர்பாட், வாட்ச், பென்சில், ஐபோன் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு தேவையான மின்னணு பொருட்களை இந்தியா தற்போது சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மதர் சன் குரூப், டாட்டா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள்தான் ஆப்பிள் தயாரிப்பு பொருட்களுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து வருகிறது.

இந்த உபகரணங்கள் தற்போது இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2030ம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதி மதிப்பு 35 முதல் 40 பில்லியன் டாலர் வரை உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய மின்னணு துறைக்கு ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சீனா மற்றும் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த பொருட்களை தற்போது இந்தியா சீனாவுக்கே ஏற்றுமதி செய்வது ஒரு முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.