வருமானவரி சேமிப்புக்காக முதலீடு திட்டங்களை தேர்வு செய்யலாமா? வல்லுனர்கள் கூறுவது என்ன?

வருமான வரியை சேமிப்பதற்காக அதிக பலன் தராத திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது என்றும் வருமான வரி செலுத்தினாலும் பரவாயில்லை நம்முடைய முதலீடு நமக்கு நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் மட்டுமே சேர வேண்டும் என்று…

investment

வருமான வரியை சேமிப்பதற்காக அதிக பலன் தராத திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது என்றும் வருமான வரி செலுத்தினாலும் பரவாயில்லை நம்முடைய முதலீடு நமக்கு நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் மட்டுமே சேர வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான நபர்கள் முதலீடு செய்யும் போது வருமான வரியை சேமிக்க வேண்டும் என்பதற்காகவே சில லாபம் தராத முதலீடுகளை செய்கிறார்கள் என்றும் அந்த வகை முதலீடுகளால் எந்த விதமான பலனும் முதலீட்டாளர்களுக்கு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

வருமான வரி செலுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் நமக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை நாட்டிற்காக கொடுப்பதில் எந்த விதமான தவறும் இல்லை என்றும் அந்த வருமான வரியை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக தவறான அல்லது அதிக லாபம் கிடைக்காத முதலீடுகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

வருமான வரி சலுகை உள்ள முதலீடு சில நல்ல முதலீடாகவும் இருக்கிறது என்றும் வருமானவரிக்காக முதலீடு செய்பவர்கள் பொருளாதார ஆலோசர்களின் ஆலோசனை செய்து அவ்வாறு செய்யலாம் என்றும் ஆனால் பெரும்பாலும் வருமான வரி போனாலும் பரவாயில்லை நல்ல முதலீட்டில் முதலீடு செய்தால் நீங்கள் செலுத்தும் வருமான வரியை விட உங்களுக்கு அதிகமாக லாபம் கிடைக்கும் என்று தான் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

எனவே ஒரு முதலீட்டை முதலீடு செய்த போது அந்த முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்குமா என்பது மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்காக ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்து சிரமப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் பொருளாதார வல்லுனர்களிடம் ஆலோசனை செய்து அதன் பின் அதில் உள்ள நிறைவு குறைகளை நீங்களே ஆய்வு செய்து அதன் பின் முதலீடு செய்ய வேண்டும்.