ஜிபிஎஸ், மின்சாரம் தயாரிக்கும் வசதி கொண்ட காலணி.. ஐஐடி மாணவர்கள் சாதனை..!

Published:

 

ஜிபிஎஸ் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் அது நவீன காலணியை ஐஐடி மாணவர்கள் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தூர் ஐஐடி மாணவர்கள் தங்களுடைய பேராசிரியர்களின் உதவியுடன் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய காலணியை வடிவமைத்துள்ளனர். இந்த காலணிகள் புதுமையான அம்சங்கள் கொண்டது என்றும் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்புக்கு இது உதவும் என்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க உதவும் வகையில் இந்த காலணிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் ஐஐடி இயக்குனர் தெரிவித்துள்ளார்..

ஐஐடி பேராசிரியர் ஐஏ பழனி என்பவரின் வழிகாட்டுதல் ஐஐடி மாணவர்கள் இந்த காலணியை தயாரித்துள்ளதாகவும் ஒவ்வொரு காலணிகளும் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இருக்கும் என்றும் அந்த மின்சாரம், மின்கலனில் சேமிக்கப்பட்டு காலணியில் உள்ள சின்ன சின்ன சாதனங்களை இயக்க  பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்..

மேலும் இந்த காலணியை அணிந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், பள்ளி குழந்தைகள் , மலை ஏறுபவர்கள், ராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள் ஆகியவர்கள் இந்த வகை காலணியை பயன்படுத்தினால் அவர்கள் வழி தவறி போனாலும் எங்கே இருக்கிறார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இந்த காலனியை அணிந்தால் அவர்கள் சரியாக நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா? சரியாக பணியை செய்கிறார்களா என்பதை கூட கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு தற்போது சோதனை வடிவில் உள்ளதாகவும் விரைவில் விற்பனைக்கு வரும் வகையில் இந்த கண்டுபிடிப்பு செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...