திமுகவை எதிர்க்கட்சி வரிசையில்கூட அமர விடக்கூடாது.. ஆளுங்கட்சி வைத்துள்ள பிரச்சினைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்.. திமுகவை முடிப்பது தான் முதல் வேலை.. அடுத்து தான் தேசிய அரசியலில் கவனம்.. விஜய்யின் வியூகத்தை பார்த்து அசந்த அரசியல் விமர்சகர்கள்.. இவரா ஒன்னும் தெரியாத அரசியல்வாதி?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் ஒரு நேர்காணலில், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க. மீதான விமர்சனங்கள் குறித்து பேசினார். அந்த அந்த பேட்டியில்…

ibrahim rawthar

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் ஒரு நேர்காணலில், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க. மீதான விமர்சனங்கள் குறித்து பேசினார். அந்த அந்த பேட்டியில் கூறியதாவது:

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின், விஜய் தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அவரது கட்சியான ‘தமிழக வெற்றி கழகம் வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளையும் 10 மண்டலங்களாக பிரித்து நிர்வாக பணிகளை தொடங்கியுள்ளது.

விஜய்யைப் பொறுத்தவரை, தி.மு.க.வை ஆளுங்கட்சி வரிசையில் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி வரிசையில்கூட அமர விடக்கூடாது என்ற வியூகத்துடன் செயல்பட தொடங்கிவிட்டார்.

இதற்காக, இன்னும் எவ்வளவு இணக்கமாக மக்களுடன் செல்ல வேண்டும், ஆளுங்கட்சி செய்து வைத்துள்ள பிரச்சினைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும், குறிப்பாக மலைகள், ஏரிகள், குளங்கள் அழித்த விவகாரங்கள், மதரீதியான பிரிவினைவாதங்கள், சாதிய பிரச்சினைகள் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாக ராவுத்தர் இப்ராஹிம் தெரிவித்தார்.

திருட்டுப் பையன், அயோக்கிய பையன், கொலை செய்பவன், கஞ்சா விற்பவன் என பலரும் சொகுசான வாழ்க்கை வாழும் நிலை இங்கே உள்ளது. காவல் துறையை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத ஒரு ஆட்சி நடக்கிறது,” என்று ராவுத்தர் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், விஜய் தன்னிச்சையாக போட்டியிடாமல் என்.டி.ஏ. கூட்டணிக்குள் வர வேண்டும் என்று முன்னர் அறிவுறுத்தியிருந்ததாகவும், ஆனால் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்து தனது மக்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று கூறியதாகவும் ராவுத்தர் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

பவன் கல்யாண் ஆந்திராவில் பெரிய ஆளாக இருக்கலாம், ஆனால் விஜய் ஒரு தேசிய அடையாளம், அவரால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என எங்கு சென்றாலும் வாக்குகளை பெற முடியும் என்றும் ராவுத்தர் இப்ராஹிம் கூறினார்.

பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நோக்குடன் செயல்படும் நிலையில், தென்னிந்தியாவில் காங்கிரஸை உயிர்ப்புடன் வைத்திருக்க விஜய் தேவைப்படுகிறார். கேரளாவிலும் பிற தென் மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு செல்வாக்கு கிடைக்க விஜய்யின் நட்சத்திர பிரபலம் உதவும் என்பதால், ராகுல் காந்தி அவரை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர மும்முரம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விஜய் தனது முடிவில் தெளிவாக இருக்கிறார். அவர் முதல் வேட்பாளர்; அவரை சார்ந்து ஒரு அணி உருவாகும். தி.மு.க.வை முடிப்பதுதான் அவரது வேலை,” என்று கூறி ராவுத்தர் இப்ராஹிம் பேட்டியை முடித்தார்.