சம்பளம் தரவில்லை என்பதால் ஐடி நிறுவன ஓனரை கடத்திய ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

By Bala Siva

Published:

 

1200 ஊழியர்களை வைத்து ஐடி நிறுவனம் நடத்தி வந்த ஓனரை 8 ஊழியர்கள் சேர்ந்து கடத்தியதாக கூறப்பட்ட நிலையில் சம்பளம் வர காலதாமதம் ஆனதால் கடத்தல் சம்பவம் நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் ஓனர் திடீரென கடத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர். அப்போது சம்பளம் சரியான தேதியில் வரவில்லை என்பதால் தான் 8 ஊழியர்கள் சேர்ந்து ஐடி நிறுவனத்தின் ஓனரை கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி இன்னும் சில ஊழியர்கள் ஐடி நிறுவனத்தின் ஓனரின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி மகன்களை மிரட்டி அவர்களுடைய வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக லேப்டாப் மொபைல் போன் ஆகிய பொருள்களை ஊழியர்கள் சம்பளத்திற்கு பதிலாக எடுத்துக் கொண்டதாக கடத்தப்பட்ட ஐடி நிறுவனம் ஓனரின் மனைவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 8 பேர்களை கைது செய்துள்ளதாகவும், மேலும் சிலரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.