ஒரு நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு பாலிசியை இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியுமா?

லைப் இன்சூரன்ஸ் எடுக்கின்றோமோ இல்லையோ, கண்டிப்பாக ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நம்முடைய மரணத்திற்கு பின் நம்முடைய குடும்பத்தினர் பொருளாதார கஷ்டம் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக…

Health Insurance

லைப் இன்சூரன்ஸ் எடுக்கின்றோமோ இல்லையோ, கண்டிப்பாக ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நம்முடைய மரணத்திற்கு பின் நம்முடைய குடும்பத்தினர் பொருளாதார கஷ்டம் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக லைஃப் லைஃப் இன்சூரன்ஸ் எடுக்கப்படுகிறது என்றால் நாம் வாழும் காலத்திலேயே திடீரென எதிர்பாராத விதமாக மருத்துவச் செலவு ஏற்பட்டால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். அத்தகைய நிலையை தவிர்ப்பதற்காக தான் ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தற்போது அதிகரித்து விட்டதன் காரணமாக ஒரு நிறுவனத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து விட்டால் அந்த நிறுவனத்தின் சேவை திருப்தி இல்லை என்றால் மாற்ற முடியுமா என்பது குறித்த கேள்வி பலருக்கு உள்ளது. இதற்கு பதிலாக கண்டிப்பாக மாற்ற முடியும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஒரு நிறுவனத்தில் நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து விட்டால் அந்த நிறுவனத்தின் சேவை நமக்கு திருப்தி இல்லை என்றால் தாராளமாக வேறொரு நிறுவனத்தில் நம்முடைய பாலிசியை மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றம் செய்யும்போது கிளைம் செய்யாத ஆண்டுகள், நோ கிளைய்ம் போனஸ் மற்றும் காத்திருப்பு காலம் ஆகியவை எந்த விதத்திலும் இழப்பீடு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் உள்ள பாலிசியை வேறொரு காப்பீட்டு நிறுவனம் நிறுவனத்திற்கு  மாற்றும் போது குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கான பாலிசி விவரங்களை புதிய நிறுவனத்திற்கு  வழங்க வேண்டும். ஒருவேளை அதைவிட குறைவாக இருந்தால் கூட எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கிறதோ அந்த ஆண்டுகளுக்கான பாலிசி விவரங்களை கொடுத்தால் போதும். புதிய நிறுவனம் அந்த விவரங்களை பரிசீலனை செய்து தங்களுடைய நிறுவனத்தில் அந்த பாலிசியை மாற்றிக் கொள்ளும்.

எனவே சேவை சரியில்லாத நிறுவனத்தில் தெரியாமல் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து விட்டால் கடைசி வரை அந்த நிறுவனத்திடம் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. உடனடியாக நீங்கள் உங்களுக்கு எந்த நிறுவனம் நம்பகமானது என்று தெரிகிறதோ அந்த நிறுவனத்திற்கு தாராளமாக மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.