தோண்ட தோண்ட வெளிவரும் ஜோதி ரகசியம்.. துபாயில் இருந்து பணம்.. வாட்ஸ் அப் உரையாடல்.. அதிகாரிகள் அதிர்ச்சி..!

ஹரியானாவைச் சேர்ந்த யூட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ISI உடன் முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடைய எல்லை பயண வீடியோக்கள் சில அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக…

jothi5

ஹரியானாவைச் சேர்ந்த யூட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ISI உடன் முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடைய எல்லை பயண வீடியோக்கள் சில அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஒரு வருடம் முன்பு ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ஜோதி மல்கோத்ரா மீது விசாரணையில் முக்கிய ஆதாரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் கிராம வாழ்க்கையை காண்பிக்கும் ஒரு சாதாரண பயண வீடியோ போல இருந்த அந்த வீடியோ, உண்மையில் திட்டமிட்ட உளவுத்துறை நடவடிக்கையாக மாறியுள்ளது.

தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுவதாவது, ஜோதி மல்கோத்ரா அந்த பகுதியில் முழுமையான ஆய்வு செய்துள்ளார். அதில் குடியிருக்கும் பாலைவன மக்கள், ராணுவம் எந்தெந்த இடங்களில் இருக்கிறது, நிலப்பரப்பில் உள்ள இடைவெளிகள், வேலிக்கட்டுப்பாடு போன்ற விஷயங்களை நுணுக்கமாக பதிவு செய்துள்ளார்.

மேலும் தார் வீடியோ மட்டும் அல்லாமல், ஜோதி மல்கோத்ராவின் அட்டாரி மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் எடுத்த வீடியோக்களும் சந்தேகத்திற்குரியவற்றாக இருக்கின்றன. அவை ராணுவ இயக்கங்கள் மற்றும் பாதுகாப்பு சீர்கேடுகள் பற்றிய தகவல்களை வெளிக்கொணருகின்றன.

இந்திய-பாக் எல்லை காட்சிகளை வைத்து கைவினை வரைபடம் பகிர்ந்துள்ள ஜோதி
அவரது எல்லை பயண வீடியோக்களே பாகிஸ்தானை சேர்ந்த ஊடுருவலாளர்களுக்கு உதவியாக இருந்துள்ளன. வீடுகளிலிருக்கும் மக்களை “பாகிஸ்தானில் உங்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்டல், பாகிஸ்தானை பாராட்டும்படி பேச தூண்டுதல் ஆகியவை அவரது வீடியோக்களில் சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

ஒரு வீடியோவில், எல்லை அருகே நின்று, “இங்கே எல்லைக்குப் பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லை” என்று கூறும் காட்சியும் உள்ளது. இந்த வீடியோ இந்திய கிராமங்களுக்கு ஊடுருவுவது எப்படி சாத்தியமாகும் என்பதற்கான குறியீடாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

மேலும் ஜோதி பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகள் டானிஷ் மற்றும் அலி ஹசனுடன் வாட்ஸ்அப் மூலம் உரையாடியுள்ளார். ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி தகவல்கள் பரிமாறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அலி ஹசனுடன் நடந்த ஒரு உரையாடலில், ஹசன், “ஜோ யார், என் இதயம் உன்னுடைய சந்தோஷத்துக்காக பிரார்த்திக்கிறது. உன்னுடைய வாழ்க்கையில் துக்கம் ஒருபோதும் இருக்கக்கூடாது” என கூறியுள்ளார். அதற்கு ஜோதி சிரிக்கும் இமோஜி அனுப்பி, “என்னை பாகிஸ்தானில் கல்யாணம் பண்ணி வையுங்கள்” என பதிலளித்துள்ளார்.

ஜோதி மல்கோத்ராவுடன் இணைக்கப்பட்ட நான்கு வங்கிக் கணக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒன்றுக்கு துபாயிலிருந்து சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பணம் வரவாகியுள்ளது. இந்த பணம் தகவல்களுக்கு மாறாக கொடுக்கப்பட்டதா என்பதை தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உளவுத்துறை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜோதி மல்கோத்ரா, செய்தி செயலிகள் வழியாக பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களை பகிர்ந்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2023 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு விசா விண்ணப்பிக்க சென்றபோது, அங்கு டானிஷ் என்ற அதிகாரியுடன் சந்தித்ததன் மூலம் அந்த தொடர்பு தொடங்கியது என அவர் கூறியுள்ளார்.

“நான் Travel With-Jo என்ற யூட்யூப் சேனல் நடத்துகிறேன். எனக்கு இந்திய பாஸ்போர்ட் உள்ளது, பாகிஸ்தான் தூதரகத்தில் விசா விண்ணப்பிக்க சென்றபோது டானிஷின் மொபைல் எண் பெற்றேன். பின்னர் அவருடன் உரையாட தொடங்கினேன்,” என அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பிறகு, பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய டானிஷ் உதவியதாகவும், அங்கு அவர் இரண்டு முறை சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பயணங்களின் போது அலி ஹசன் என்ற அதிகாரியை அவர் சந்தித்தார். அவர் தான் பாகிஸ்தானில் ஜோதியின் தங்கும் இடம் மற்றும் பயண ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அவர் ஜோதியை பல பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் அறிமுகப்படுத்தியதாகவும், அவற்றில் சகீர் மற்றும் ரானா ஷஹ்பாஸ் என்பவர்களும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

“நான் சகீரின் எண்ணை என் போனில் ‘Jatt Randhawa’ என்ற பெயரில் பிடிபடாமல் இருக்க சேமித்தேன், என்று ஜோதி ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல்காக உள்ளது.