வீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக கட்டி அடைக்கலாமா? நஷ்டம் தான் வரும்..!

By Bala Siva

Published:

வீடு கட்ட அல்லது புதிய வீடு வாங்கவோ, வங்கியில் லோன் வாங்கியிருந்தால் சிலர் தங்கள் கையில் மொத்தமாக பணம் கிடைக்கும் நேரத்தில், அந்த பணத்தை கட்டி விடுவதுண்டு. இந்த நிலையில், வீடு கட்ட வாங்கிய கடனை கையில் காசு இருந்தால் மொத்தமாக கட்டி அடைப்பது சரியானதா என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

வீடு கட்டுவதற்கு லோன் வாங்கினால், அந்த லோனை 20 வருடம் கட்டி அடைப்பதாக வைத்துக் கொண்டால், முதல் 10 வருடத்தில் பெரும்பாலும் லோன் வாங்கியவர் வட்டி மட்டுமே தான் கட்டியிருப்பார். ஆனால் அடுத்த பத்து வருடத்தில், லோன் வாங்கியவர் அசல் அதிகமாகவும், வட்டியை குறைவாகவும் கட்டுவார்.

குறிப்பாக மாத தவணை 20,000 என்றால், முதல் மாதத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கு மேல் வட்டி, வெறும் 5000 ரூபாய் மட்டுமே அசலில் கழிப்பது போல் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே 20 ஆயிரம் ரூபாய் தவணை கட்டும் போது, 10,000 மேல் அசல் கழியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வீடு கட்ட வாங்கிய லோனை மொத்தமாக அடைக்கும் வாய்ப்பு கிடைத்தால், முதல் 10 வருடங்களில் கையில் பணம் இருந்தால் கட்டுவது நமக்கு லாபமாக இருக்கும். ஆனால் கடைசி சில ஆண்டுகளில் மொத்தமாக பணம் கட்டுவது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும், ஏனென்றால் நாம் கட்டும் மாதத் தவணையில் பெரும்பாலும் அசல் தொகையாக இருக்கும். வட்டி என்பது மிகவும் குறைவாக இருக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து பொருளாதார ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்கவும்.