ஜூலையில் வெளியாகும் சூப்பர் ஸ்மார்ட்போன் Honor X50: என்னென்ன சிறப்பம்சங்கள்?

By Bala Siva

Published:

ஜூலை மாதம் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல மாடல்ஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதும் இதனால் மொபைல் போன் பிரியர்களுக்கு ஜூலை மாதம் மிகச்சிறந்த மாதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஜூலை மாதம் வெளியாகும் ஸ்மார்ட் ஃபோன்களில் ஒன்று Honor X50. இந்நிறுவனத்தின் முந்தைய மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை இந்தியாவில் பெற்றுள்ள நிலையில் இந்த புதிய மாடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

Honor X50 மாடல் ஸ்மார்ட்போனில் Snapdragon 6 Gen 1 SoC பிராஸசர் மூலம் இயக்கப்படும் என்பது ஒரு மகிழ்ச்சியான தகவல் ஆகும். மேலும் இந்த போன் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz அம்சத்துடன் இருக்கும் என்பதால் நிச்சயம் இந்தியாவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honor X50 ஸ்மார்ட்போனில் சில முக்கிய தகவல்கள் இதோ:

* 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* Snapdragon 6 Gen 1 SoC பிராஸசர்
* 8 ஜிபி, 12 ஜிபி அல்லது 16 ஜிபி ரேம்
* 128 ஜிபி, 256 ஜிபி அல்லது 512 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 108MP பிரதான கேமரா, 2MP துணை லென்ஸ் கேமிரா
* 8 எம்.பி செல்பி கேமிரா
* 5,700mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
* கைரேகை சென்சார்
* USB-C மற்றும் ஹெட்போன் ஜாக்