HDFC அறிமுகம் செய்யும் புதிய கிரெடிட் கார்ட்.. ஸ்வைப் செய்யாமல் பணம் செலுத்தலாம்..!

Published:

HDFC வங்கி ஏற்கனவே பல்வேறு கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்த நிலையில் தற்போது மில்லினியா என்ற புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டை நாம் ஆன்லைன் மூலம் பயன்படுத்தி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் நேரில் பயன்படுத்தும் போது ஸ்வைப் செய்யாமல் பிஎஸ்ஓ எந்திரத்தின் மூலமே பணம் செலுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டு என்பது தற்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது என்பதும் ஏராளமானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரெடிட் கார்டை பொறுத்தவரை அதனை சரியாக பயன்படுத்தினால் அது ஒரு வரம் என்றும் ஆனால் அதனை தவறாக பயன்படுத்தினால் அதுவே மிகப்பெரிய நரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் HDFC வாங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த மில்லினியா கிரெடிட் கார்டு குறித்த சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்

அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, ஜொமைட்டோ உள்பட பல தளங்கள் மூலம் மில்லினியா கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் புள்ளிகளைப் பெறலாம். ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும், அதிகபட்சமாக ரூ. 1000 வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும்.

எரிபொருள், வாடகை மற்றும் அரசு தவணைகள் தவிர, அனைத்து செலவுகளுக்கும் 1% கேஷ்பேக் புள்ளி கிடைக்கும். மேலும் ஒரு ஆண்டில் ரூ1 லட்சம் செலவு செய்தவர்களுக்கு ரூ.1000 சிறப்பு பரிசு கிடைக்கும்.

பெட்ரோல் நிரப்பினால் 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது. 400 முதல் ரூ. 500 வரை இந்த கார்டை பயன்படுத்தி பெட்ரோல் வாங்கி கொள்ளலாம். மேலும் இதில் அதிகபட்சம் ரூ.250 தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

மில்லினியா கிரெடிட் கார்டு பெறுபவர்கள் சம்பளம் பெறுபவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களாக இருக்க வேண்டும். மேலும் 21 முதல் 40 வயது உடையவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.35,000 மாத மொத்த சம்பளம் பெறுபவர்கள் மட்டும் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அதேபோல் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ள சுயதொழில் செய்பவர்கள் இந்த கார்டுகளை விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

மேலும் உங்களுக்காக...