காரை வைத்தே கின்னஸ் சாதனை – கோவை தொழிலதிபர்

By Velmurugan

Published:

கோவையை சேர்ந்த விஷ்ணு ராம் என்பவர் 246 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்தை காரில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

கோவையை சேர்ந்த தொழிலதிபரும் விளையாட்டு வீரருமான விஷ்ணு ராம் என்பவர் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவின் நான்கு எல்லைக்கும் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி சென்னையில் இருந்து கிளம்பிய கன்னியாகுமரி, தேசு லே ,கோட்டேஸ்வர் அவர் நான்கு பகுதிகளுக்கு காரில் பயணம் செய்தார்.

இறுதியாக 256 மணி நேரத்தில் 12,200 km தூரத்தை காரில் பயணித்தவர், முந்தைய கின்னஸ் உலக சாதனைக்கான 41 மணி நேரத்தை முறியடித்தார். இதன் மூலம் கிடைத்த 2முதல் 3 லட்சம் நிதியை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்க உள்ளதாக விஷ்ணு ராம் தெரிவித்துள்ளார்.

வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி..தோல்வி பாதையில் இந்திய அணி

இந்த நிதியை பெண்குழந்தைகள் கல்வி சார்ந்த பள்ளி கட்டிடம் கட்டவும் , கழிப்பறை வசதி அமைக்க உதவுவதாக தெரிவித்துள்ளார்.