மக்களை மிரட்டும் பிபார்ஜாய் புயல்! அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரம் !

Published:

நாடு முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில் அதற்கான சாத்திய கூறுகள் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன.

அதற்கு ஏற்றபடி அரபிக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காலை வலுப்பெற்று காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு புயலாக மாறியது. இந்த புயலுக்கு பிபார்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் பேராபத்து என்பதாகும். புயல் ஆனது நேற்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக வலுவடைந்தது.

மேலும் அரபிக் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இந்த புயல் நேற்று இரவு 11:30 மணி நிலவரப்படி கோவாவிற்கு மேற்கு மற்றும் தென்மேற்கு 870 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கு 930 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் படிப்படியாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் அடுத்த தினங்களில் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காரை வைத்தே கின்னஸ் சாதனை – கோவை தொழிலதிபர்

மேலும் அரபிக் கடலில் உருவான புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...