இப்பதான் ஆட்டத்திற்குள்ளேயே வருகிறது Google.. அறிமுகமாகிறது Gemini Live..!

  Google, தனது புதிய அம்சமான Gemini Live-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது, உங்கள் சுற்றுப்புறங்களை நேரடியாக பார்க்கும் திறன் கொண்ட AI chatbot ஆகும். Pixel 9 மற்றும் Samsung Galaxy S25 போன்களில்…

gemini live

 

Google, தனது புதிய அம்சமான Gemini Live-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது, உங்கள் சுற்றுப்புறங்களை நேரடியாக பார்க்கும் திறன் கொண்ட AI chatbot ஆகும். Pixel 9 மற்றும் Samsung Galaxy S25 போன்களில் இப்போதைக்கு இந்த அம்சம் சப்போர்ட் செய்யும்

இந்த சிறப்பம்சம் எப்படி வேலை செய்கிறது என்றால் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம், live video இயக்கப்படும். அதன் பிறகு, கேமராவால் பார்க்கும் பொருளைப் பற்றிய கேள்விகளை நீங்கள் கேட்கலாம். ஒரு பயனர் தங்கள் போனைக் கொண்டு மீன் தொட்டியை காண்பித்து, அதிலிருக்கும் மீனின் வகையை Gemini Live-யிடம் கேட்டார்.
மேலும், ஸ்க்ரீனை பகிர்ந்து உங்கள் ஷாப்பிங் தளங்களை திறந்து, AI-யிடம் தயாரிப்புகளை ஒப்பிடச் சொல்கலாம், அல்லது சிறந்த மாடல்கள், தயாரிப்புகளை பரிந்துரை செய்யச் சொல்லலாம்.

ஆனால் இந்த வசதி தற்போது Gemini Advanced சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சம் 45 மொழிகளில் கிடைத்தாலும் இப்போதைக்கு சில நாடுகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதை பயன்படுத்த 18வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதேபோல் கல்வி மற்றும் பிசினஸ் அக்கவுண்ட்களில் செயல்படாது

தற்போது Pixel 9 மற்றும் Galaxy S25 போன்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், கூகுள் அறிவித்துள்ளதுபோல், மற்ற Android போன்களுக்கும் விரைவில் இந்த அம்சம் விரிவாக்கப்படும்.

AI-யின் எதிர்காலத்தை மாற்றும் ஒரு திருப்புமுனையாக இந்த அம்சம் உள்ளது என்றும்,
இது, கூகுளின் AI-யை அடுத்த பரிணாமத்துக்கு எடுத்துச் செல்கிறது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது வாசிக்கவோ கேட்கவோ மட்டும் இல்லாமல், பார்ப்பதையும் செய்கிறது.