வேலையை விட்டு தூக்கினால் கூகுள் தான் எனது மனதிற்கு பிடித்த நிறுவனம்.. ஒரு நெகிழ்ச்சியான பதிவு..!

Published:

கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் கூகுள் தன்னை வேலையில் இருந்து நீக்கினாலும் அந்த நிறுவனம்தான் தனக்கு மிகவும் மனதிற்கு பிடித்த நிறுவனம் என நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அவர்களில் ஒருவர் சமூக வலைதளத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார்.

தான் கூகுள் நிறுவனத்தில் பதினைந்து வருடங்கள் வேலை பார்த்தேன் என்றும் அந்த காலங்கள் மிகவும் அசாதாரணமானவை என்றும் அவர் தெரிவித்தார். நான் உண்மையிலேயே அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது என்னை ஊக்கப்படுத்திய நபர்கள் மிகவும் அதிகம் என்றும் நான் நம்ப முடியாத அதிர்ஷ்டசாலி என்று நான் நினைத்திருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பணி செய்த பயணம் என்பது என் இதயத்தில் இருக்கும் சிறப்பான நினைவுகள் என்றும் கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது தனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் சக ஊழியர்கள் நண்பர்கள் மற்றும் சவாலான நேரங்களில் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கை கொடுத்தவர்கள் அனைவரையும் இந்த பயணத்தில் நான் நினைத்து பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

இன்று நான் ஒரு சிறந்த ஊழியராக ஆகி இருக்கின்றேன் என்றால் அது எனது சக ஊழியர்கள் கொடுத்த ஆதரவு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகள் எனக்கு மிகவும் பொற்காலம் என்றும் தற்போது என்னை வேலையில் இருந்து கூகுள் நீக்கினாலும் அந்த நிறுவனம்தான் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிறுவனமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் ஒருவேளை கூகுள் மீண்டும் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டால் நன்றியுடையவனாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...