கூகுள் டூடுளில் இன்று என்ன தெரியுமா? தெற்காசிய மக்களின் விருப்பமான உணவு பானிபூரி ..!

Published:

கூகுள் தனது ஹோம் பக்கத்தில் உள்ள டூடுளில் தினந்தோறும் ஒரு முக்கிய விஷயங்களை தெரிவித்து வரும் என்பதும் அன்றைய தினத்தின் சிறப்பு அம்சங்களை அதில் குறிப்பிட்டு வரும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இன்று தெற்காசிய மக்களின் விருப்பத்திற்குரிய உணவுகளில் ஒன்றான பானிபூரி குறித்த டூடுளில் வந்திருப்பதை அடுத்து தெற்காசிய மக்கள் குறிப்பாக இந்திய மக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

பானிபூரி என்பது உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மற்றும் மசாலா பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு மிருதுவான பூரி ஆகும். தெற்காசியாவில் இது மிகப்பெரிய பிரபலமான ஒரு தெரு உணவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இதே நாளில் தான் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த பானிபூரி பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்தியா முழுவதும் இந்த உணவு பிரபலப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பாக குழந்தைகள் இந்த உணவை விருப்பத்துடன் சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் இந்த உணவு பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் பானிபூரி என்று பெயரால் அழைக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த பெயர் தான் அழைக்கப்பட்டு வருகிறது.

கொண்டைக்கடலை, வெள்ளை பட்டாணி மற்றும் நீர் கலவையுடன் கூடிய சின்ன பூரியில் வைத்து சாப்பிடும் இதை பஞ்சாப் ஜம்மு காஷ்மீர் புது டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கோல் கப்பே அல்லது கோல் கப்பா என்று அழைக்கின்றனர். மேற்குவங்கம் மற்றும் பீகார் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இதை புச்காஸ் அல்லது ஃபுச்காஸ் அழைக்கின்றனர். தென்னிந்தியாவில் இதை பானிபூரி என்று தான் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பானிபூரி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாகும். பூரியில் நீர் கலந்த கலவையை நனைத்து கொடுக்கும்போது அதை கசிந்து விடாமல் சாப்பிடுவதில் ஒரு தனித்திறமை வேண்டும். அதேபோல் பூரி நொறுங்காமல் ஒரே வாயில் போட்டு சாப்பிடுவதிலும் ஒரு திறமை வேண்டும்.

இப்படி ஒரு தெற்காசிய மக்களின் உணவை இன்று கூகுள் தனது டூடுளில் வெளியீட்டு சிறப்பித்துள்ளது அதுமட்டுமின்றி பானிபூரி என்ற கேமையும் அறிமுகப்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் விளையாடும் கேமாகவும் மாற்றியுள்ளது. இந்த கேமை நான் பொழுதுபோக்கு விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் பானிபூரி சாப்பிடுபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் கூகுள் என்று பானிபூரியை தனது டூடுளாக இவெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...