தங்கம் விலை இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் 6 ஆயிரம் வரும் என்றும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு கிராம் பத்தாயிரம் வரும் என்றும் தங்க நகைக்கடைக்காரர்கள் கணித்திருந்தனர். ஆனால் அனைவரது கணிப்பையும் தாண்டி தங்கம் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 14ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 5550 ரூபாய் என்று இருந்த நிலையில் தற்போது ரூ. 5,445 என விற்பனையாகி வருகிறது. பத்து நாட்களில் ஒரு கிராம் தங்க தங்கம் விலை நூறு ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது என்பதும் ஒரு சாரனுக்கு 800 ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை இன்னும் படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் 5000 ரூபாய்க்கும் கீழ் ஒரு கிராம் தங்கம் விற்பனையாகும் என்றும் கூறப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை உள்பட அனைத்து நாடுகளின் பங்குச்சந்தைகள் மிக அபாரமாக லாபத்தை கொடுத்து கொண்டு இருப்பதால் தங்கத்தின் முதலீடு செய்பவர்கள் தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருவதாகவும் அதனால் தான் தங்கத்தின் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் திருமண சீசன் முடிந்து விட்டதை அடுத்து இன்னும் இரண்டு மாதம் கழித்துதான் மீண்டும் திருமணம் செய்து தொடங்கும் என்பதால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் உயரவில்லை என்றும் அதேபோல் அமெரிக்காவிலும் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என்பதால் தங்கத்தின் விலை சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் விலை குறைவு என்பது தற்காலிகமானது தான் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கத்தின் விலை மிக அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.