தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்..? சாமானியருக்கு இன்னும் எட்டாத விலை தான்..!

By Bala Siva

Published:

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தினசரி பார்த்து வரும் நிலையில் இன்று சென்னையில் நேற்றைய விலை தங்கம் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று சென்னையில் தங்கம் ஒரு கிராம் ரூ. 5742 என விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று அதே விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்றும் அதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 45 ஆயிரத்து 936 என விற்பனை ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் 24 கேரட் தூய்மையான தங்கம் ஒரு கிராம் 6217 என்றும் எட்டு கிராம் 49,736 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றாலும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரு கிலோ வெள்ளி விலை 82,700 என்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று 700 ரூபாய் குறைந்து 82,000 என விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையில் நேற்றைய விலையில் இருந்து இன்று எந்த விதமான மாற்றமும் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் மாற்றம் வர வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஒரு சவரன் ரூ.6000 என என நெருங்கி உள்ள நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ரூ.10,000 என அதிகரிக்கும் என்றும் எனவே தங்கத்தில் எப்போது முதலீடு செய்தாலும் அது லாபத்தை தான் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளதாகவும் அதனால்தான் இந்தியாவிலும் உயர்ந்து வருவதாகவும் குறிப்பாக இந்தியாவில் திருமண சீசன் தொடங்கி விட்டதால் இனி தங்கம் விலையில் நல்ல ஏற்றம் இருக்கும் என்றும் நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...