நீண்ட சரிவுக்கு பின் மீண்டும் உயரும் தங்கம் விலை.. இதுதான் வாங்க சரியான நேரமா?

Published:

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்னால் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5540க்கு மேல் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் 5,445 என விற்பனையானது. இதனை அடுத்து இன்னும் தங்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று இன்றும் தங்கம் திடீரென உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5475 என்றும் ஒரு சவரன் 43 ஆயிரத்து 800 ரூபாய் என்று விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு நேற்றும் இன்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தங்கம் இறங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் இனி வருங்காலத்தில் தங்கம் விலை அதிகமாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தங்கத்தின் தேவை கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த நிலையில் விலை குறைந்ததாகவும் தற்போது மீண்டும் தங்கத்தின் தேவை அதிகரிப்பதால் மீண்டும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்கம் விலை எப்பொழுது எல்லாம் குறைகிறதோ அப்போது பணத்தை இருப்பு வைத்திருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் குறையும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று முதலில் ஆலோசர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் மட்டுமின்றி எந்த ஒரு பொருளும் ஏற்ற இறக்க்த்துடன் தான் இருக்கும் என்றும் இறங்கும்போது சுதாரித்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் நீண்ட கால அடிப்படையில் சேமிக்கும் வழக்கம் உள்ளவர்கள் கையில் எப்போதும் பணம் வைத்திருந்து அந்த பணத்தை விலை இறங்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...