ஜெமினி லைவ்.. அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இலவசம்: கூகுள் அறிவிப்பு..!

By Bala Siva

Published:

Gemini Live: கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்ப அம்சமான ஜெமினி, மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ள நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு “ஜெமினி லைவ்” இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கூகுளின் செயற்கை நுண்ணறிவு “ஜெமினி” தற்போது குரல் வழியாக உரையாடலை மேற்கொள்வதற்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இனிமேல் குரல் வழியாக நமது சந்தேகங்களை கேட்டு, “ஜெமினி” மூலம் பதிலை பெற்றுக் கொள்ளலாம் என்பதில் குறிப்பிடத்தக்கது.

தற்போது, கூகுள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக “ஜெமினி லைவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில், பிரிமியம் திட்டத்தில் அட்வான்ஸ் பயனர்களுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் தற்போது உலகளவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரல்வழி உரையாடல் மூலம் பயனர்களுக்கு மிகவும் இனிமையான அனுபவத்தை வழங்குவதோடு, சந்தா செலுத்துபவர்களுக்கு கூடுதல் வசதியும் இலவச பயணங்களுக்கு ஓரளவு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எப்படி பயன்படுத்துவது என்பதை தற்போது பார்ப்போம்:

1. உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் Google Play Store இல் இருந்து “ஜெமினி” பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள்.

2. பயன்பாட்டைத் திறந்து, திரையின் கீழ் வலது மூலையில் உள்ள குரல் அலை வடிவம் ஐகானை தேர்வு செய்ய வேண்டும்.

3. “ஜெமினி லைவ்” ஐ பயன்படுத்த அந்த ஐகானை  ஓப்பன் செய்ய வேண்டும்

4. முதலில், நிபந்தனைகளை ஏற்கும்படி சொல்லும். அதை ஏற்றுக்கொண்ட பிறகு, “ஜெமினி லைவ்” பக்கம் தோன்றும் இனி நீங்கள் பேச துவங்குங்கள்; ஜெமினி AI உங்களுக்கு  பதிலளிக்கும்.

5. AI செயல்பாட்டை நிறுத்த, புதிய கேள்வி கொடுக்க “ஹோல்ட்” பொத்தானை பயன்படுத்தலாம்.