இன்று முதல் மார்ச் மூன்றாம் தேதி வரை ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுத்து நிற்பதை காண முடியும் என்று நாசா அறிவித்துள்ளது.
இந்த அரிய நிகழ்வை பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி கருவிகள் உதவியுடன் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் செயலிகள் மூலம் கோள்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஏழு கோள்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அணிவகுத்து நிற்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த அரிய நிகழ்வு இனிமேல் பதினைந்து வருடங்கள் கழித்து, அதாவது 2040 ஆம் ஆண்டில் தான் மீண்டும் காண முடியும் என்றும் நாசா கூறியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இதே போன்று ஏழு கோள்கள் வரிசையாக நேர்கோட்டில் அணிவகுத்து நின்ற நிலையில், ஒரே மாதத்தில் மீண்டும் இப்படிப்பட்ட அரிய நிகழ்வு நிகழ்வதால், இதனை மிஸ் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஏழு கோள்களும் அவற்றின் சுற்றுப்பாதையில் ஒரே டிகிரிக்குள் வருவது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். இந்த அதிசய நிகழ்வை காண பல்வேறு வான் ஆய்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.