திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!

By Bala Siva

Published:

திருப்பதி கோவிலில் இன்றும் நாளையும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த டோக்கன்களை பெற்றவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி தினங்களை முன்னிட்டு இன்றும் நாளையும் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதையடுத்து இன்றும் நாளையும் வழங்கப்பட்டிருந்த இலவச தரிசனம் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தான அதிகாரிகள் டோக்கன் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் இலவச நேரம் ஒதுக்குவது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பதால் இன்றும் நாளையும் டோக்கன் பெற்ற பக்தர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தை போக்க இன்றும் நாளையும் டோக்கன்கள் பெற்றவர்களுக்கு வேறொரு நாளில் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.