இனி டாஸ்மாக்-ல எக்ஸ்ட்ரா பணத்துக்கு குட்பை சொல்ற நேரம் வந்தாச்சு.. குடிமகன்களுக்கு குட்நியூஸ் சொன்ன அமைச்சர்

By John A

Published:

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதன் காரணம் என்னவென்றால் கள்ளச்சாரயம் ஒழிப்பே பிரதானமாக இருந்தாலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தும் அனைவரிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் வாக்குறுதியின் படி ஆங்காங்கே மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகின்றன.

எனினும் கள்ளக் குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் போல் இனி ஒரு துயரம் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்திலேயே அரசே மதுவினை விற்பனை செய்து வருகிறது. இது அரசுக்கு வருமானம் அளிக்கும் ஒரு துறையாக இருந்த போதிலும் மதுவாங்குவோருக்கு பாட்டிலுக்குக் கூடுதலாக 5, 10 என்று அதிக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது.

உங்க கையில இன்னும் 2000 ரூபாய் நோட்டு வைச்சுருக்கீங்களா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இனி இதற்கு தீர்வு காணும் பொருட்டு கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளது போல் மது விற்பனைக்கு பில் கொடுக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மதுப்பிரியர்கள் பில்லில் உள்ள தொகையைச் செலுத்தினாலே போதுமானது. மேலும் கணக்குகளும் முறையாகக் கையாளப்படும். அதிக விலைக்கு மது விற்பனை, எக்ஸ்டரா பணம் கேட்பது போன்ற அனைத்திற்கும் பில்லிங் முறை மூலம் தீர்வு கிடைக்கும்.

இதற்காக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனைக்கு பயன்படுத்துவதற்காக 12,000 பில்லிங் மிஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.