நெட்டிசன் ஒருவர் சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு லக்னோ சென்று வந்ததாகவும், டெல்லியில் இருந்து லக்னோ சென்ற விமான கட்டணத்தை விட தான் நிறுத்தி இருந்த காரின் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த கௌசிக் என்பவர் தனது காரில் விமான நிலையத்திற்கு வந்து காரை பார்க்கிங் செய்துவிட்டு லக்னோவுக்கு சென்றார். அவர் திரும்பி வந்த போது தனது காரின் பார்க்கிங் கட்டணம் 5770 ரூபாய் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் பார்க்கிங் கட்டணம் 4889 ரூபாய் ஜிஎஸ்டி 888 என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தபோது, டெல்லியில் இருந்து லக்னோ செல்வதற்கு விமான கட்டணம் ரூ.2836 மட்டுமே என்றும் ஆனால் அதைவிட அதிகமாக காரை பார்க்கிங் கட்டணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது காரின் லாக் உடைந்து வந்ததாகவும் பல இடங்களில் டேமேஜ் ஆகியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பார்க்கிங் ஏஜென்ட் கூறிய போது டெல்லி விமான நிலையத்தை பொருத்தவரை முதல் 30 நிமிடத்திற்கு ரூ.120 பார்க்கிங் கட்டணம் என்றும் அதன் பிறகு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 170 ரூபாய் பார்க்கிங் கட்டணம் என்றும், கெளசிக் 9 நாட்கள் தனது காரை பார்க்கிங் செய்திருந்ததால் தான் இவ்வளவு பெரிய தொகை வந்திருக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.