கிரெடிட் கார்டு போலியாக வாடகை செலுத்துதினால் என்னென்ன பிரச்னைகள் வரும்? முக்கிய தகவல்கள்..!

Published:

கிரெடிட் கார்டுகள் மூலம் போலியாக வாடகை செலுத்துதல் பல இடங்களில் நடைபெற்று வருகிறது என்பதும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டில் அதிக ரிவார்ட்ஸ் பெறவும் கேஷ்பேக் பெறவும் பல்வேறு புதிய யுக்திகளை அதன் பயனளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் அவசர தேவைக்கு பணம் தேவை என்றால் கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தியதாக நண்பனின் அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பிவிட்டு நண்பனிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளும் தந்திரமும் நிறைய நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் பணத்தை செலவழித்ததாக நமக்கு ரிவார்ட் பாயிண்ட் கிடைப்பது மட்டுமின்றி ரொக்கமும் கிடைப்பதால் ஏராளமானவர் இந்த தந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் போலியாக வாடகை செலுத்தினால் அதனால் சில அபாயங்கள் நேர வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரெடிட் கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவதால் வரிவிலக்கு பெறலாம் என்றும் கிரெடிட் கார்டில் பயன்படுத்தி அதிக ரிவாட் பாய்ண்டுகள் பெறலாம் என்றும் நோக்கத்தில் இந்த போலி வாடகையை பல செலுத்தி வருகின்றனர். ஆனால் மோசடியான வாடகை ரசீதுகளை சமர்ப்பித்து வருமான வரி விலக்கு பெற்றால் அது சட்டவிரோதம் என்றும் அதை வருமானவரித்துறை கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் வாடகையை பெற்றுக்கொள்ளும் வகையில் பணத்தை மாற்றினால் அவர்கள் தங்களுடைய வரி கணக்கை தாக்கல் செய்யும்போது வாடகை பெற்று பணத்திற்கு வருமான வரி கட்ட வேண்டும். ஒரு நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாடகை பெற்று இருந்தால் வருமான வரி தாக்கல் செய்யும்போது அது தானாகவே வருமான வரி கட்ட வேண்டிய நிலைக்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே போலியாக கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவது பின்னாளில் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்றும் வருமான வரித்துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் உங்களுக்காக...