டிவிட்டர் ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறையலாம்: எலான் மஸ்க் எடுக்கும் அதிரடி நடவடிக்கை

Published:

டிவிட்டரில் உள்ள பயனாளிகளின் பாலோயர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலர் கொடுத்து சமீபத்தில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், அதனை அடுத்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

twitter 1 Copy இந்த நிலையில் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதாகவும் அந்த கணக்குகளை தேடி கண்டுபிடித்து அவற்றை நீக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட்டர் பயனாளிகளின் பாலோயர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையலாம் என்றும் பல போலி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

twitter 3 Copyஇதனை அடுத்து மில்லியன் கணக்கில் பாலோயர்கள் வைத்திருந்தவர்களின் பாலோயர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரிபாதி குறையலாம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டரில் புளுடிக் பயனாளர்களுக்கு கட்டணம் வைத்துள்ள நிலையில் தற்போது போலி கணக்குகளை முழுமையாக ஒழிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்றும் இதனை அடுத்து டுவிட்டரில் உள்ள கணக்குகள் அனைத்துமே கிட்டத்தட்ட உண்மையானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

போலி டுவிட்டர்ர் கணக்குகளினால் தான் டுவிட்டரில் ஏராளமான போலி செய்திகள் பரவி வருகின்றன என்றும் போலி கணக்குகளை ஒழித்துவிட்டால் போலி செய்திகளும் குறையும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி டுவிட்டரில் இனி கணக்குகள் தொடங்க ஏதாவது ஒரு ஆவணங்களும் கேட்கப்படும் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் டுவிட்டர் ஒரு நேர்மையான சமூக வலைத்தளமாக இருக்கும் என்றும் எந்த வித போலித்தனமும் இல்லாத ஒரு சமூக வலைத்தளமாக மாற்றுவதே தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...