ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு போட்டியாக ஒரு சமூக வலைத்தளம்.. களத்தில் இறங்கும் சாட் ஜிபிடி..!

  பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், சாட் ஜிபிடி என்ற ஏஐ டெக்னாலஜி நிறுவனத்தை நடத்தி வரும் “ஓபன் ஏஐ” நிறுவனம்,…

OpenAI

 

பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், சாட் ஜிபிடி என்ற ஏஐ டெக்னாலஜி நிறுவனத்தை நடத்தி வரும் “ஓபன் ஏஐ” நிறுவனம், ஒரு புதிய சமூக வலைதளத்தை தொடங்க இருப்பதாகவும், அது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி மிகவும் பிரபலம் ஆகி வரும் நிலையில், பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் புதுப்புது ஏஐ டெக்னாலஜி செயலிகளை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஓபன் நிறுவனம் மற்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக ஒரு புதிய சமூக வலைதளம் தொடங்க இருப்பதாகவும், அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எத்தனை ஏஐ டெக்னாலஜி வந்தாலும், இன்னும் சாட் ஜிபிடி-க்கு உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனால், இந்த நிறுவனம் தொடங்கும் சமூக வலைதளத்திற்கும் நிச்சயமாக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளை படிப்படியாக இழந்து வருவதாகவும், அதே நேரத்தில் எக்ஸ் உள்ளிட்ட சில சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சமூக வலைதளம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.