சென்னையில் விஜய் மட்டும் தான் ஜெயிப்பார்.. மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவின் கோட்டையா? ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறார்களா? பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கூட பின்னடைவா? லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு..!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் 16 தொகுதிகளுக்கான மக்களின் மனநிலை குறித்த விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வடசென்னை மற்றும் மத்திய…

vijay dmk admk

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் 16 தொகுதிகளுக்கான மக்களின் மனநிலை குறித்த விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக தனது செல்வாக்கை வலுவாக தக்கவைத்துள்ளதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் போன்ற அதிமுகவின் பாரம்பரிய கோட்டையிலேயே திமுகவின் ஜே.ஜே. எபினேசர் 42 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான அலையை வெளிப்படுத்துகிறது.

மிகவும் உற்றுநோக்கப்படும் பெரம்பூர் தொகுதியில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நேரடியாகக் களம் காணும் நிலையில், அவர் 43 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி. சேகர் 33 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஒருபுறம் விஜய்யின் சினிமா கவர்ச்சி மற்றும் இளைஞர்களின் ஆதரவு அவருக்கு பெரும் பலமாக இருந்தாலும், மறுபுறம் தொகுதி மக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஆர்.டி. சேகரின் களப்பணி விஜய்க்கு ஒரு கடும் சவாலாகவே அமையும். பாமகவின் திலகபாமா மற்றும் நாம் தமிழரின் வெற்றித் தமிழன் ஆகியோர் இந்தப் போட்டியில் பின்தங்கியே உள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில், அவர் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார். கடந்த முறை 60 சதவீத வாக்குகளை பெற்ற அவர், இந்த முறையும் 56 சதவீத வாக்குகளை பெற்று ஹாட்ரிக் வெற்றியை தாண்டி நான்காவது முறையாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லிவாக்கம் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் திமுகவின் இளம் முகங்கள் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். வில்லிவாக்கத்தில் அண்ணாநகர் கார்த்திக் 43 சதவீத வாக்குகளுடன் கம்பர்டபிளான இடத்தில் இருக்கும் நிலையில், தவெகவின் ஆத அர்ஜுனா 26 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதேபோல் எழும்பூர் தனி தொகுதியில் திமுகவின் தமிழன் பிரசன்னா 47 சதவீத வாக்குகளுடன் ஒரு மிகப்பெரிய ஸ்வீப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். அதிமுகவின் இளம் வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி 27 சதவீத வாக்குகளுடன் போராடி வருகிறார். ராஜ்மோகன் போன்ற நட்சத்திர பேச்சாளர்கள் தவெக சார்பில் நின்றாலும், தொகுதி மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்ற நிலைப்பாடு அங்கு தெளிவாகத் தெரிகிறது.

இறுதியாக, ராயபுரம் மற்றும் திருவிக நகர் போன்ற தொகுதிகளிலும் திமுகவே ஒரு எட்ஜ் எடுத்து முன்னிலையில் உள்ளது. ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் தனது வெற்றிக்காக தீவிரமாக போராடினாலும், திமுகவின் டாக்டர் சுபேர் கான் 39 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ஜெயகுமார் 34 சதவீத வாக்குகளுடன் மிக அருகிலேயே இருப்பது அந்த தொகுதியில் ஒரு இழுபறி நிலையை உருவாக்கியுள்ளது.

திருவிக நகரில் பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் மீதான அனுதாப அலை இருந்தாலும், கே.எஸ். ரவிச்சந்திரன் 42 சதவீத வாக்குகளுடன் வெற்றியை நோக்கி நகர்கிறார். ஒட்டுமொத்தமாகச் சென்னையின் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவின் மகளிர் உரிமை தொகை மற்றும் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் ஒரு பலமான வாக்கு வங்கியை உருவாக்கி இருப்பதை இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் உறுதி செய்கின்றன.