இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி ஆகியுள்ளது. பாஜகவை அதிமுக கூட்டணியில் இணைக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று அண்ணாமலை அதிமுகவை விமர்சிக்கக்கூடாது என்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டும் அல்ல, விஜய்யையும் இந்த கூட்டணிக்கு இழுத்து வர அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என்று அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. விஜய் கூட்டணிக்கு வர முடியாது என்று சொன்னால், அவரை மிரட்டி வரவைக்கலாம் என்பதே அமித்ஷாவின் திட்டம் என அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக, பாஜக, விஜய் கட்சி, தேமுதிக, பாமக என கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தால், திமுக கூட்டணியை வீழ்த்தலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த கூட்டணி கட்சியினர் உள்ளனர். ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.