பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்? தயாராகும் மாணவர்கள்..!

Published:

பொறியியல் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்ற தகவல் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் டூ தேர்வு முடிவடைந்ததும் மாணவர்கள் பொறியியல் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு ஏராளமான மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடங்களுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் கல்லூரிகளை தேர்வு செய்வார்கள் என்பதும் ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு கடந்த சில ஆண்டுகளாக விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஆறு பொறியியல் கல்லூரி மூடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்ன தகவல் வெளியாகி உள்ளன. தனியார் பொறியியல் கல்லூரிகளை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் அங்கீகார பெற வேண்டும் என்பதும் இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கும் தினங்களில் விண்ணப்பம் செய்து பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு உட்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி அங்கீகாரம் பெற காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஆறு தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெறவில்லை என்பதால் அந்த ஆறு கல்லூரிகளும் மூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் குறித்த பட்டியலை தெரிந்து கொண்டு அதன் பிறகு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் உங்களுக்காக...