14 வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க் உள்ள நிலையில், அவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளனர். தற்போது, 14வது குழந்தை…

Elon Musk 1 1080x770 1

 

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க் உள்ள நிலையில், அவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளனர். தற்போது, 14வது குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜஸ்டிஸ் வில்சனை எலான் மஸ்க் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. அதனைத் தொடர்ந்து, நடிகை ரிலேவை திருமணம் செய்தார், ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.

பின்னர், பாடகி கிரீம்ஸை திருமணம் செய்த எலான் மஸ்க் அவருடன் மூன்று குழந்தைகளை பெற்றார். இதற்கிடையே, மூன்று மனைவிகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். சமீபத்தில், ஷிவோன் ஷில்லிஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில், பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயிண்ட் கிளேர் தனது குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று தெரிவித்தார். தற்போது, 14வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஆஷ்லே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். எங்கள் அற்புதமான மகனைப் பற்றி நேரடியாக பகிர்ந்து கொள்வது நல்லது என்று உணர்ந்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு, எலான் மஸ்க் இதய வடிவ சின்னத்தை பதிலாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Elon Musk Welcomes 14th Child

எலான் மஸ்க், குழந்தை, மனைவி, Elon Musk, Children, Marriage, News