தமிழ்நாட்டில் இத்தனைகோடி வாக்காளர்களா? அதிக வாக்காளர்கள் எந்தத் தொகுதி தெரியுமா?

By John A

Published:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்களார்கள் உள்ளனர். இதில் ஆண்கள்- 3,07,90,791, பெண்கள் – 3,19,30,833, மூன்றாம் பாலினத்தவர் – 8,964.

மாநிலத்தில் அதிக வாக்களார்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் ஆண்கள் -3,38,183, பெண்கள் – 3,37,825, மூன்றாம் பாலினத்தவர் -125 என மொத்தம் 6,76,133 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் மிகக் குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளுர் தொகுதி உள்ளது. இங்கு ஆண்கள் -85,065, பெண்கள் – 88,162, மூன்றாம் பாலினத்தவர் – 3 என மொத்தம் 1,73,230 வாக்காளர்கள் உள்ளனர்.

மதுரையில் தலைமை செயலக கிளை.. ஆளுனர் பதவி அகற்றம்.. தமிழ் ஆட்சி மொழி.. தவெக செயல்திட்டம்..!

இந்நிலையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், வாக்காளர் பட்டியலில் முகவரி, பெயர், தொகுதி ஆகியவை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கான முகாமானது வருகிற நவம்பர் 16, 17 மற்றும் 23,34 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இங்கேயே சமர்ப்பிக்கலாம்.

பெயர் சேர்த்தலுக்கு முகவரிச் சான்றிதழ், வயது சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் மற்ற நாட்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அந்தந்தப் பகுதி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் 2 நகல்கள் வழங்கப்படும்.