ரிட்டயர்டு ஆனவுடன் செய்ய கூடாத முக்கிய தவறு.. இதை செய்தால் செலவுக்கு கூட காசிருக்காது.!

அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ பார்த்து ரிட்டயர்டு ஆனால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும், அந்த தொகையை அவர்கள் சரியான வழியில் சேமிக்கவில்லை என்றால் கடைசி காலத்தில் அவர்களுக்கு செலவுக்கு கூட…

Retirement

அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ பார்த்து ரிட்டயர்டு ஆனால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும், அந்த தொகையை அவர்கள் சரியான வழியில் சேமிக்கவில்லை என்றால் கடைசி காலத்தில் அவர்களுக்கு செலவுக்கு கூட பணம் இருக்காது என்றும் ஒரு சிறிய செலவுக்கு கூட தங்கள் குடும்பத்தினரிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை பார்த்தாலோ அல்லது கணவன் மட்டும் வேலை பார்த்தாலோ அவர்கள் ரிட்டையர் ஆகும்போது ஒரு பெரிய தொகை வரும். அரசு ஊழியராக இருந்தால் குறைந்தது 50 லட்சம் வரும் என்ற நிலையில் அந்த பணத்தை சரியான வகையில் முதலீடு செய்து தங்கள் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிட்டையர்டு ஆன பிறகு வரும் பெரிய தொகையை அப்படியே வீடு அல்லது நிலத்தில் போட்டு விட்டால் அதன் பிறகு செலவுக்கு பணம் இருக்காது என்றும் அதனால் மொத்தமாக வீடு அல்லது நிலம் வாங்கும் தவறை மட்டும் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மனிதனாக பிறந்தால் ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது கனவாக இருந்தாலும் அதை வாங்க வேண்டிய வயது ரிட்டயர் ஆன பிறகு கிடையாது என்றும் 30 முதல் 35 முதல் வயது முதல் வீடு வாங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்து 45 அல்லது 50 வயதிற்குள் வீடு வாங்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு வீடு வாங்க முடியவில்லை என்றால் கடைசி வரை வாடகை வீட்டில் இருந்தால் கூட பரவாயில்லை, யாரும் தயவு செய்து ரிட்டயர்டு   ஆன பின் கிடைக்கும் பணத்தை எடுத்து வீடு வாங்க வேண்டாம் என்றும் அதன் பிறகு ஒவ்வொரு செலவும் தனது மகனிடம் கையேந்த வேண்டிய நிலை இருக்கும் என்றும் பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

எனவே ரிட்டயர்டு   ஆகும்போது கிடைக்கும் பணத்தை தேவையான போது எடுத்துக் கொள்ளும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், பிக்சட் டெபாசிட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் அவசர தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று வீடு அல்லது மனையில் போட்டு விட்டால் கோடி கணக்கில் நமது பெயரில் சொத்து இருந்தாலும் ஒரு 100 ரூபாய் செலவு செய்ய கூட பணம் இருக்காது என்றும் ரிட்டையர் ஆனவர்களுக்கு அறிவுரையாக கூறப்பட்டு வருகிறது.