ஆணின் வயிற்றில் கருப்பை மற்றும் சினைப்பை.. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!

ஆணின் வயிற்றில் கருப்பை மற்றும் சினைப்பை இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிர் மிஸ்திரி என்ற 46 வயது நபருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்…

surgery

ஆணின் வயிற்றில் கருப்பை மற்றும் சினைப்பை இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிர் மிஸ்திரி என்ற 46 வயது நபருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

இதனை அடுத்து அவருக்கு ஹெர்னியா பரிசோதனை செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு பெண்களுக்கு உள்ளது போல் கருப்பை மற்றும் சினைப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் பெண் தன்மைக்கான எந்த ஒரு அறிகுறியும் அவருக்கு இல்லை என்றும் மருத்துவ உலகில் இது மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வு என்பதால் ஆச்சரியத்தை ஏற்படுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்த போது தான் அவரது வயிற்றின் சதைப்பகுதியில் ஒட்டிய நிலையில் வளர்ச்சியடையாத கருப்பை இருந்தது என்றும் அந்த கருப்பை தற்போது அகற்றப்பட்டதாகவும் இது பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடு என்றும் அவருக்கு பெண் தன்மை எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆணின் வயிற்றில் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருந்தது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.