தமிழ்நாட்டில் இரட்டை இலை மலரும் அல்லது உதயசூரியன் உதிக்கும்.. 3வது கட்சிக்கு வாய்ப்பே இல்லை.. 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பு.. கருத்துக்கணிப்பை தவிடுபொடியாக்குமா விஜய்யின் இளைஞர் கூட்டம்.. உங்க கருத்துக்கணிப்பு ஈபிஎஸ்க்கோ அல்லது ஸ்டாலினுக்கோ சாதகமா இருக்கலாம்… ஆனா அந்த பெட்டிக்குள்ள விழப்போற ஒவ்வொரு இளைஞனோட ஓட்டும் விஜய்க்கான தீர்ப்பா இருக்கும்…!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக “உதயசூரியனா? அல்லது இரட்டை இலையா?” என்ற இருமுனை போட்டிக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த தமிழக…

vijay dmk admk

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக “உதயசூரியனா? அல்லது இரட்டை இலையா?” என்ற இருமுனை போட்டிக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த தமிழக அரசியலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட சில கருத்துக்கணிப்புகள், இப்போதும் திராவிட பேரியக்கங்களின் செல்வாக்கு குறையவில்லை என்றும், பாரம்பரிய வாக்காளர்கள் இப்போதும் பழைய சின்னங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்றும் கூறுகின்றன. ஆனால், இந்த கணிப்புகள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டன; அதுதான் தமிழகத்தின் ‘இளைஞர் சக்தி’.

விஜய்யின் வருகை என்பது வெறும் ஒரு நடிகரின் அரசியல் பிரவேசம் மட்டுமல்ல, அது பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் ‘பைனரி’ முறையை உடைப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலை பொறுத்தவரை, சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் நீண்ட கால அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் வாக்களிக்கலாம். ஆனால், தற்போதைய இளைஞர்கள் வேலைவாய்ப்பு, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஒரு புதிய மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்புதான் விஜய்யின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது.

விஜய்யின் தவெக தனது உள்கட்சி ஆய்வுகள் மூலம் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியை 2026-இல் அறுவடை செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே விஜய்யின் வருகையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயன்றாலும், விஜய் தனது தனித்துவமான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். “தி.மு.க அரசியல் எதிரி, பா.ஜ.க சித்தாந்த எதிரி” என்று அவர் அறிவித்திருப்பது, இரு திராவிட கட்சிகளின் மீதும் அதிருப்தியில் இருக்கும் நடுநிலை வாக்காளர்களை தன் பக்கம் இழுப்பதற்கான ஒரு ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

முதியவர்களின் அனுபவம் பழைய சின்னங்களின் வெற்றியை உறுதி செய்யும் என்று நம்பும் அரசியல் விமர்சகர்கள், இளைஞர்களின் வேகம் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வரும் என்பதைப் பலமுறை கண்டுள்ளனர். குறிப்பாக, விஜய்யின் பொதுக்கூட்டங்களில் திரளும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்கள் அந்தந்த குடும்பங்களில் மாற்றத்தை கொண்டு வரும் தூதுவர்களாக மாற வாய்ப்புள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உதயசூரியனுக்கோ அல்லது இரட்டை இலைக்கோ வாக்களிக்க நினைத்தாலும், அந்த வீட்டிலுள்ள இளைஞர்கள் விஜய்க்காக அவர்களை மனமாற்றம் செய்யக்கூடும் என்பதே தற்போதைய கள நிலவரம்.

தமிழக அரசியலில் “மூன்றாவது கட்சிக்கு இடமில்லை” என்பது கிட்டத்தட்ட உண்மைதான்.. சிவாஜி கணேசன், விஜயகாந்த் முதல் கமல்ஹாசன் வரை தாங்கள் தான் மூன்றாவது சக்தி என்று சொன்னவர்கள் இன்று அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள். எனவே இந்த கூற்றை தவிடுபொடியாக்குவதே விஜய்யின் பிரதான இலக்காக உள்ளது. இதற்காக அவர் ஏற்கனவே 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்து, மக்கள் பிரச்சனைகளை அடிமட்டத்திலிருந்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளார். முதியவர்களின் வாக்குகள் ஸ்திரத்தன்மையை விரும்பினாலும், இளைஞர்களின் வாக்குகள் பரிசோதனையையும் மாற்றத்தையும் விரும்புகின்றன. இந்த முரண்பாடுதான் 2026 தேர்தலை இந்தியாவிலேயே மிகவும் உற்றுநோக்கப்படும் தேர்தலாக மாற்றப்போகிறது.

இறுதியாக, கருத்துக்கணிப்புகள் என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் ஒரு மாதிரி மட்டுமே. ஆனால், தேர்தல் என்பது மக்களின் உணர்ச்சிகரமான முடிவாகும். விஜய்யின் இளைஞர் பட்டாளம், சமூக வலைதளங்களிலும் நேரடி பிரச்சாரங்களிலும் காட்டும் தீவிரம், பழைய அரசியல் கணக்குகளை நிச்சயம் மாற்றி எழுதும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் பிடிவாதமான விசுவாசத்தை, இளைஞர்களின் புதிய அலை முறியடிக்குமா என்பது 2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் தெரியவரும். அது உதயசூரியன் உதிப்பதோ அல்லது இரட்டை இலை மலர்வதோ அல்ல, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமாகக்கூட இருக்கலாம்.