நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு பிறகு, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல கருத்துக்களை அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக என இரு கட்சிகளையும் அதிர வைத்துள்ளது என்று என்பது தான் இன்று பெரும்பாலானா ஊடகங்களின் தலைப்பு செய்திகள் மற்றும் விவாதமாக உள்ளது. திமுக ஆட்சியை தக்க வைத்தே ஆக வேண்டிய நிலை, அதிமுக இம்முறை ஆட்சியை பிடிக்கவில்லை என்றால் கட்சி சிதறுவதை தடுக்க முடியாது. பாஜக காலூன்றியே ஆக வேண்டிய நிலை, நாம் தமிழர் குறைந்தது டெபாசிட் வாங்கியாவது காட்ட வேண்டும் என்ற நெருக்கடி. ஆனால் விஜய்யின் கட்சிக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அவர் எந்தவித சமரசமும் செய்யத் தேவையில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக மற்றும் ஊழல் பற்றிய விமர்சனங்கள்
திமுக தனது வாக்கு வங்கியை காப்பாற்றி கொள்ள, நான்கு முனை போட்டி சாதகமாக இருக்கும் என்று பொதுவாக நம்பினாலும், விஜய்யின் வருகை அவர்களின் வாக்கு வங்கியை, குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளை பெரும்பாலும் இழக்கும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, தற்போது தமிழகத்தில் ஊழல் மிக மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் அரசின் குறைகளை பற்றி பேசாமல், அதிமுக, பாஜக மற்றும் மத்திய அரசு மீது கவனம் செலுத்துகின்றனர்.
விஜய்யின் கட்சி தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், ஒருசில கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசியலுக்கு புதிதாக வந்திருக்கும் விஜய், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வைத்திருப்பார் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்றும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் அவரது ஆட்சி எப்படி இருக்கும் என்பதை விமர்சனம் செய்ய முடியும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
