தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி UPI 123Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை மாற்றியுள்ளது.
UPI 123Pay முறை மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ரூ.5,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் UPI Lite வாலட்டில் உள்ள வரம்பு ரூ.2,000-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேலும் எளிதாக கிடைக்கக்கூடும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. UPI பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க, இரண்டு முக்கியமான அப்டேட்டுகள் அறிவிக்கப்படுள்ளன.
(i) UPI 123Payக்கு ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படுகிறது.
(ii) UPI Lite வாலட் வரம்பு ரூ.2,000-ல் இருந்து ரூ.5,000 ஆக மாற்றப்படுகிறது. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறும் வகையில், “ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக இருக்கும்.”
UPI 123Pay, இந்தியாவில் ஸ்மார்ட்போன் இல்லாத சாதாரண போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும்.
*99# க்கு அழைத்து, வங்கியை தேர்ந்தெடுத்து, டெபிட் கார்டு விவரங்களை அளித்து, UPI 123Pay பேமென்ட் செட்டிங்கை அமைக்கலாம். இதன் மூலம், UPI PIN இன் மூலம் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை, இணைய இணைப்பு இல்லாதபோதிலும் மேற்கொள்ள முடியும்.