டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..

  கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி மூலம் ஏராளமான நபர்கள் ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், இதில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஏமாறுகிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

digital arrest

 

கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி மூலம் ஏராளமான நபர்கள் ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், இதில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஏமாறுகிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் பல பகுதிகளில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த இருவர் இந்த மோசடிக்கு பணத்தை இழந்து உள்ளதாக தெரிகிறது.

கோவை பெண் ஐடி ஊழியர் ஒருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் தமிழகத்தில் ஏமாந்து இருப்பதாக கூறப்படுகிறது. குன்னூரை சேர்ந்த 26 வயது பெண்ணிடம் மும்பை போலீஸ் பேசுவதாக கூறி ஒரு கும்பல் தொடர்பு கொண்டிருக்கிறது. சீனாவுக்கு செல்லும் கொரியரில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும், அதில் உங்கள் ஆதார் எண் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியதோடு, 24 மணி நேரமும் விசாரணையில் இணைப்பு இருக்க வேண்டும் என்று கூறியதோடு, டிஜிட்டல் முறையில் கைது செய்திருப்பதாகவும் மிரட்டி இருக்கின்றனர்.

இதை நம்பி அந்த பெண் எட்டு நாட்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளார். வங்கி கணக்கில் உள்ள பணத்தை அரசு கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என கூறியதை நம்பி, குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 15 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். சிறிது நேரத்தில் வீடியோ கால் துண்டிக்கப்பட்டதால், ஏமாற்றப்பட்டதை அறிந்தபின், போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இதே போன்ற நீலகிரியில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரை, டெல்லியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் சிறை வைத்திருக்கின்றனர். அவரது நிரந்தர வைப்பு நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்திருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பேரிடம் மோசடி நடந்திருப்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.