DHL குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி அஸ்கர் இதுகுறித்து கூறுகையில், “வணிக சூழல் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருவதால் செலவினங்களை கட்டுப்படுத்த இது ஒரு அவசியமான நடவடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.
தற்போதைய பணி நீக்க நடவடிக்கைகள் DHL நிறுவனத்தின் சர்வதேச எக்ஸ்பிரஸ், சப்ளை செயின் மற்றும் ஈ-காமர்ஸ் துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் லெட்டர் பரிமாற்றம் என்பது சுத்தமாக நின்று விட்டதாகவும் இதனால் பார்சல் சர்வீஸ் மட்டுமே ஓரளவு கை கொடுப்பதாகவும் இதனால் பெரும் அளவு வருமானம் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.